Tamil Organizations

துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த இருவர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின்போது துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இருவரை கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் பிரதேசத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  அத்துடன்,  இவர்களிடமிருந்து மேற்படி துண்டுப்பிரசுரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியனாறு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உறுகாமம் பிரதேசத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இளைஞர்கள் சிலர் மேற்படி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

உறுகாமம் கிராமத்தில் இந்திய அரசின் வீட்டுத் திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா? என்ற  தலைப்பிடப்பட்டு உறுகாமம் வாழ் தமிழ் மக்கள் என குறிப்பிடப்பட்டு மேற்படி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேற்படி துண்டுப்பிரசுரங்களில் 1990இல் உறுகாமத்திலிருந்து  வெளியேறிய முழு முஸ்லிம் குடும்பங்களுக்கும்  ஏறாவூர் சதாம் உசேன் கிராமத்தில் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டு விட்டன.

இன்று இந்திய அரசின் வீட்டுத் திட்டத்தில் பயன் பெறும் முஸ்லிம்கள் யார்? உறுகாமத்தில் தமிழர்களை மாத்திரமே அரசாங்கம் மீள்குடியேற்றம் செய்தது. முஸ்லிம்களை அல்ல. பாதிக்கப்பட்ட முழுத் தமிழர்களுக்கும் வீடுகளை வழங்குங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டி பரீட்சைகள் (2013)
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் சுவிஸ்வாழ் தமிழ்பிள்ளைகளின்  தமிழ் அறிவு வளர்ச்சிக்கு  உதவியும், ஊக்கமும் அளிக்கும் நோக்கமாக அறிவுப்போட்டி ஒன்றை 08.06.2013 சனிக்கிழமை (யூன்) நிகழ்த்தி அதில்  பங்குபற்றும் பிள்ளைகளுக்கு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும்  நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால்  எதிர்வரும் 06.07.2013 சனிக்கிழமை (யூலை) மாதம் சூரிச் மாநிலத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 24வது வீரமக்கள் தினத்தில்  திறமைசாலிகளுக்கு சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.

தொடர்புகட்கு:- 079/8224153 , 076/583 84 10 , 0779485214

மின்னஞ்சல் முகவரி: peot.swiss.ch@gmail.com,

www.peotswiss.com

application Form 2

3 PEOT application 2013

அரசியலமைப்பு திருத்தங்களை தெரிவுக்குழுவே பிரேரிக்க முடியும்
நாடாளுமன்ற  தெரிவுக்குழு மட்டுமே இலங்கையில் அரசியலமைப்புக்கான திருத்தங்களை பிரேரிக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்திக் கூறியுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இன்று தெரிவித்துள்ளார்.

புதிய அதிகாரப்பகிர்வு முறையை கொண்டுவர விருப்பம்: ஐ.தே.க.
அதிகாரப்பகிர்வு தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றுவது தொடர்பில் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகவும் அதற்கு பதிலாக மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப புதிய அதிகாரப்பகிர்வு முறையை கொண்டுவர விரும்புவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று தெரிவித்துள்ளது.

இருப்பினும் இப்போதைக்கு 13ஆம் திருத்தத்தின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு கட்சியின் கொள்கையாக இருக்கும் எனவும் ஐ.தே.க. கூறியுள்ளது.

மக்கள் வெளியிட்ட கருத்தை தனது கட்சி கவனத்தில் எடுத்து அதன் அடிப்படையில் அதிகாரப்பரவலுக்கான திட்டத்தை முன்வைக்கும் என ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

‘இதை நாம் மக்களிடம் விடுவோம்’ எனவும் அவர் கூறினார்.

வண. மதுலுவெவ சோபித தேரர் முன்வைத்த வெஸ்ட் மினிஸ்டர் முறையை மக்களால் நேரடியாக தெரிவுசெய்யப்பட்ட அரசியல் சாராத நிறைவேற்று ஜனாதிபதி முறைமை என்ற பல தெரிவுகளை கட்சி ஆராய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மே மாதம் 29ஆம் திகதி தனது கட்சி அதன் புதிய அரசியலமைப்பை வெளியிடும். பின்னர் கட்சிகள், சமூக குழுக்களிடமிருந்து கருத்துக்களை பெற்று அதன் அடிப்படையில் இறுதி அரசியலமைப்பை இன்னும் 6 மாதங்களில் வெளியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாது : மங்கள
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளைப் பேணி பாதுகாப்பது தொடர்பில் மிக முக்கியமான பொறுப்புக்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 16 முக்கிய பிரகடனங்களையும் அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாகவும், அந்தக் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு முன்னதாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புக்களுக்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாத என அவர் தெரிவித்துள்ளார். மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோர் ஒடுக்கப்படும் நிலைமை இலங்கையில் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

13ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு பிரேரணை
13ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் இந்தப் பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட பிரேரணையாக இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தமிழர்களுக்கு எதிரானதே யுத்தம் சம உரிமையே இன்றைய தேவை : இரா.சம்பந்தன்
நடந்து முடிந்துள்ள யுத்தம் புலிகளுக்கு எதிரானது என்று வர்ணிக்கப்பட்டாலும் அது தமிழ் சிவிலியன்களுக்கு எதிராகவே பாவிக்கப்பட்டது. எனினும், யுத்தம் நிறைவடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் சமாதானத்தையும் சமவுரிமையுடனான சக வாழ்வையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காக இந்நாட்டில் நீண்டு நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு என்பதும் சமாதான சகவாழ்வு என்பதும் தமிழ் மக்களுக்கு மாத்திரமின்றி இந்நாட்டில் வாழும் சகலருக்கும் அது வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நேர்மையாக நிறைவேற்றுமாறும் வடக்கு, கிழக்கின் காணிகள் தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளுமாறும் வலியுறுத்தி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று நாடு ஒரு குழப்பகரமான நிலையில் காணப்படுகின்றது. புதியதோர் நிலையை நோக்கி பயணிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்ற நிலையில் என்னால் இங்கு சமர்ப்பிக்கப்படுகின்ற ஒத்திவைப்புவேளை பிரேரணையானது நாட்டுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையப் போவதில்லை. ஏனெனில், இந்நாட்டில் சகலரும் சுபீட்சமாக வாழ வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்த அதேவேளை, 8 நாடுகள் நடுநிலை வகித்தன.

ஐக்கிய நாடுகளின் அமையத்தில் இலங்கையும் இணைந்திருக்கின்றது என்பதையும் நினைவு கூருகின்றேன்.

எனினும், ஐ.நா. பிரேரணையை அரசாங்கம் ஏற்கவில்லை. அதே போன்று யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை ஆராய்வதற்கே தருஸ்மன் குழு அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையும் ஏற்கப்படவில்லை.

இலங்கையின் மனித உரிமைகளை மதிக்கின்ற யாவரும் சமமாக மதிக்கின்ற யாவரும் சமமாக பார்க்கின்றதோர் நல்லாட்சியை வெளிநாடுகள் எதிர்ப்பார்க்கின்றன. ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இருதரப்புமே குற்றங்களை இழைத்து வருகின்றன.

இறுதிக்கட்ட யுத்தம் என்பது புலிகளுக்கு எதிரானது என்று கூறப்படுகின்ற போதிலும் அது தமிழ் சிவிலியன்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையின் பின்னணியில் தான் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புடைமைத்தன்மை தொடர் ஐ.நா. இலங்கையை வலியுறுத்தியிருக்கின்றது. பாரதூரமான குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்கள் சமாதானத்தையும் சமவுரிமையுடனான சக வாழ்வையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சமாதான சகவாழ்வு என்பதை தமிழ் மக்கள் மாத்திரமின்றி ஒட்டுமொத்த மக்களும் விரும்புகின்றனர். இதனை நிறைவேற்ற வேண்டுமானால் பிரச்சினைகளுக்கு தீர்வு அவசியமாகும்.

அந்த வகையில் மக்கள் எதிர்பார்த்திருகின்ற நீண்டு நிலைத்து நிற்கின்ற அரசில் தீர்வொன்று தேவை என்பதை வலியுறுத்துகின்றோம் என்றார்.

சம்பந்தன், மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன்: விநாயகமூர்த்தி முரளிதரன்
எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதியிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் முரளிதரன் இதனைத் தெரிவித்தார்.

எமது பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக சர்வதேசத்தின் உதவியை நாடுவதென்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கமாக இருக்கின்றது. சர்வதேசத்தின் தலையீட்டை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதன் பின்னர் அவர்களின் தலையீட்டிலிருந்து விடுதலை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல.

எனது சகோதரனையும் புலிகள் கொலை செய்தனர். அதற்காக நான் சர்வதேச விசாரணையை கோர முடியுமா? சர்வதேச தலையீடுகளால் என்ன நடக்கும் என்பதற்கு, இந்தியாவின் இலங்கை மீதான தலையீட்டால் எமக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் மிக சிறந்த உதாரணமாகும்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்றுக் கொள்வில்லையென்ற நிலைப்பாட்டையே ஆரம்பத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடித்தது.

அதன் பின்னர் வடக்கு கிழக்கு இணைக்கப்படும் வரை தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லையென தெரிவித்தனர். ஆனால் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டனர். தற்போது வட மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். காலத்தின் தேவைக்கேற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது வரவேற்புக்குரியது.

அது போன்று சர்வதேச தலையீடு அவசியம் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டிலிருந்தும் மாற வேண்டும். ஏனென்றால் எமது பிரச்சினைகள் நாம் பேசித் தீர்மானித்துக் கொள்ள முடியும். இராணுவ மயமாக்கலை குறைக்க முடியும்.

குரோத மனப்பான்மையை வளர்த்தோமானால் எந்தப் பிரச்சினைக்கும் எம்மால் தீர்வுகளை காண முடியாது. சம்பந்தன், மாவை ஆகியோரை எனது குருவாகவே கருதுகின்றேன். ஏனெனில் எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்தியவர்கள் அவர்கள். எனவே அவர்களை மதிக்கின்றேன்.

எனவே அரசுடன் பேச்சுக்களை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இலங்கைக்கு தொடர்ச்சியாக நிதி உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கைக்கு தொடர்ச்சியாக நிதி உதவிகள் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது அறிவிக்கப்படாத போதிலும், நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டைப் போன்றே நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் செவாஜ் தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கைக்கு 587 மில்லியன் யூரோ நிதி உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தது.

மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளாக இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு சிறந்த சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் செயற்பாட்டாளர் இந்தியாவில் கைது
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளராக இருந்ததாகக் கூறப்படும் 35 வயதுடைய இலங்கையர் ஒருவரை இந்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர் நைரோபிக்கு பயணமாகவிருந்த வேளையிலேயே மும்பாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மின் பொறியியலாளரான இவர், இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டின் வேதாரணியம் கரையை மே மாதம் 9ஆம் திகதி அடைந்தார்.

இலங்கை அரசாங்கம் இவருக்கு எதிராக இன்ரபோல் அறிவித்தல் விடுவித்திருந்தமையால் இவர் மும்பாய் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.

இவர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்ட பின் மறைந்து வாழ்ந்துவந்தார். இவரை இலங்கை அதிகாரிகள் 2009ஆம் ஆண்டு கைதுசெய்து சித்திரைவதை செய்துவந்தனர். இலங்கை பொலிஸார் இவரை தேடி வந்தனர். இதனால் இவர் படகு மூலம் தமிழ்நாட்டுக்கு வந்தார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர் 2001 – 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய கல்லூரி ஒன்றில் படித்து மின் பொறியியலில் பட்டம் பெற்றவர். இவரை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஆணையாளர் ஹிமன்ஷு றோய் கூறியுள்ளார்.