Category Archives: செய்திகள்
வட மாகாணசபைத் தேர்தலில் படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும்: கபே
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் ...
பொதுபல சேனாவின் கருத்து நாட்டில் சமய, சமூக குரோதத்தை ஏற்படுத்தும் செயல்: அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்
இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு இதை ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை என பொதுபல சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாட்டில் சமய, சமூக குரோதத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
அத்துடன், இவ்வாறான அறிவிப்பு இலங்கை அரசியல் அமைப்பை அவமதிக்கும் செயல் என்பதுடன் எமது ...
மகாவம்சத்தை வாசிக்காதவர்களே இலங்கையை பெளத்த நாடு என்கின்றனர் – கலாநிதி விக்கிரமபாகு
இலங்கை பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் முதலில் மகாவம்சத்தை வாசித்து அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது என்று நவசமசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இலங்கை ஆதி முதலே தமிழ் மக்கள் வாழ்ந்த நாடு. இதை மகாவம்சமே ஏற்றுக்கொண்டுள்ளது. விஜயன் ...
லண்டன் முள்ளிவாய்க்கால் நிகழ்வு : ஆயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள்
இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் ''மார்பிள் ஆர்ச்'' பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ''பிக்காடிலி சர்க்கஸ்'' ...
வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்
இலங்கையின் இறுதிப் போரின்போது, முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கான நினைவுதின நிகழ்வுகள் வடமாகாணத்தின் பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டிருக்கின்றன.
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் நேற்றைய தினமே தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தியதாகப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த வருடம் அங்கு இடம்பெற்ற வைபவம் ...
கண்ணீர் சிந்தும் உரிமை நமக்கில்லையா?: கஜேந்திரன் கைதுக்கு ததேகூ கண்டனம்
யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதினை தமிழ் ...
செல்வராசா கஜேந்திரன் உட்பட 10 பேர் கைது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அந்த கட்சியை சேர்ந்த 10 உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸாரினாலேயே இவர்கள் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் ...
வட மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமா? : கூட்டமைப்பினரிடம் கேள்வி எழுப்பிய அமெரிக்க தூதுவர்
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சிசெனிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுத்துக்கூறியுள்ளது.
அமெரிக்க தூதுவர் மிசெல் சிசென் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ...
இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு : பொதுபல சேனா
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்தது.
இங்கு இயங்கும் சர்வ மத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே ...
ஐ.நா. பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகள் ...