Monthly Archives: March 2012
Category Archives:
தந்தை செல்வாவின் 114ஆவது ஜனனதினம்
மூதறிஞர் தந்தை செல்வாவின் 114ஆவது ஜனனதின வைபவம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இன்றுகாலை 9.30அளவில் யாழ்; நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அனுவிக்கப்பட்டு மலராஞ்சலி ...
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கோருவது நியாயமற்ற செயல்-அரசாங்கம் அறிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின்போது மூன்றாம்தரப்பு மத்தியஸ்தத்தினை கூட்டமைப்பு கோருவது நியாயமற்ற செயல் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல்தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக அரசுக்கும் கூட்டமைப்பிற்குமிடையில் கடந்த ஒருவருட காலமாக பலசுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் பேச்சுவார்த்தை மேசைகளில் வைத்து ...
பேச்சினைத் தொடர கூட்டமைப்பு தயாராகவே உள்ளது- அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி
தேசிய பிரச்சினைக்குத் தீர்வினை எட்டும் விவகாரத்தில் அரசுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கின்றது. எனினும் அரசாங்கம் இவ்விடயத்தை பின்னடித்துக் கொண்டிருக்கின்றது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்தி நேற்று சபையில் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் ...
ஜெனீவா தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த இத்தீர்மானம் வழிவகுக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பாரியளவில் மனித ...
தந்தை செல்வாவின் 114வது ஜனனதின நிகழ்வு
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர், மூதறிஞர் தந்தை செல்வாவின் 114வது ஜனனதின நிகழ்வு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இன்று பிற்பகல் 3மணியளவில் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ...
பரிந்துரைகளை நிறைவேற்றினார் பிரச்சினை தீரும்- ரணில் விக்கிரமசிங்க
நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பில், அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு, அரசாங்கத்திடமே தீர்வு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் ...
ஐ.நா மனித உரிமைப் பேரவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் பீரிஸ்
இலங்கை அரசின் கொள்கைகளை ஜெனீவா முடிவு செய்வதற்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காதென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த செவ்வாய் மற்றும் ...
பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இடதுசாரி கட்சிகள் கோரிக்கை
நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை முன்மொழிவுகளை அமுல்படுத்துமாறு, ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூன்று இடதுசாரி அமைச்சர்கள் கூட்டாக இணைந்து இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அமைச்சர்களான டியு.குணசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் ...
குவைத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை
இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு, உரிமை என்பவற்றை உறுதிப்படுத்துவது தொடர்பில் குவைத் நாட்டுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட இலங்கை தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேராவினால் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. ...
மூன்றாம்தரப்பு மத்தியஸ்தம் அவசியம்- சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி
மூன்றாம் தரப்பு ஒன்றின் மத்தியஸ்தம் அல்லது அனுசரணை இல்லாமல் இலங்கை அரசுடன் இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுக்களில் ஈடுபடுவது பயன்தராது. அவ்வாறான பேச்சுக்கள்மூலம் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றே கூட்டமைப்பு கருதுகிறது. இதுவரை காலமும் நடைபெற்ற பேச்சுக்கள் எமக்கு இதனையே ...