லண்டன் வணிக நீதிமன்றத்தில் இலங்கை தாக்கல் செய்த வழக்கில் தோல்வி! 162 மில்லியன் நட்டம்
லண்டன் வணிக நீதிமன்றத்தில் ஸ்டான்டட் சாட்டட் வங்கிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனம் தோல்வியடைந்துள்ளது. ஹெஜிங் உடன்படிக்கையின் படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 162 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டும். இதற்கு எதிரான வழக்கிலேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தோல்வியடைந்துள்ளது.
பெற்றோலிய பொருட்களின் விலை அதிகரிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் 5 வங்கிகளுடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஹெஜிங் உடன்படிக்கையை செய்திருந்தது