அனைத்து அடக்கமுறைகளையும் உடைத்தெறிவோம்---------- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்---------- ஓன்றாய் இன்றும் நாமில்லையேல் விடிவு என்றும் எமக்கில்லை

புதிய பாதையில் புதுயுகம் நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பில் பயணிப்போம்

தமிழன் என்று நன்மதிப்புடன் தன்மானமாக வாழ்வது என்றால் வாக்காளப் பொதுமக்கள் ஆகிய நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிக்க வேண்டும். மேற்கண்டவாறு கிழக்குமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பழுகாமத்தை சேர்ந்த வீ.ஆர்.மகேந்திரன் இன்று காலை தெரிவித்தார். களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர் “உண்மை,இலட்சியம்,மெய் இவை மூன்றும் நோக்கி பயனித்தாலும் இலட்சியம்தான் மிகவும் முக்கியமானது. இலட்சியத் தமிழன் வீழ்வதும் இல்லை. தங்கள் உரிமை கிடைக்கும் வரை என்றும் ஓய்வதும் இல்லை. அதற்குத்தான் நான் இறுதியாக சவாரி செய்ய தெரிவு செய்த வாகனம் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆனது வலுவடைந்து உள்ளது. பல கட்ச்சிகள் அதில் இணைந்துள்ளன. ஒருமித்த குரல் ஓங்கி ஒலிக்கும் போது அது என்றும் விடிவை நோக்கித்தான் செல்லும். எமது மக்கள் பட்ட பல துன்பகரமான மறக்கமுடியாத பல வடுக்களை ஏற்படுத்திய சம்பவங்கள் இருக்கின்றன. கடந்த கால நிகழ்வுகளை புரட்டிப்பாக்கும் போது இன்று எங்களுக்கு மெய் சிலிர்க்கின்றது. ஆனாலும் இதற்காக பரிகாரம் கிடைத்ததா? இல்லை. மனிதன் தவறு விடுவது இயற்கை. இருந்தாலும் ஆழ்ந்து சிந்திக்கும் போது தவறை திருத்திக்கொள்ள வேண்டியது இக்கால கட்டத்தில் தேவையானது. இதனாலேயே கடந்த காலங்களில் நான் பயணம் செய்த வாகனங்களை விட்டு இறங்கினேன். தற்போது நான் பயணம் செய்யும் புதிய வாகனம்,புதிய பாதையில் பயணம் செய்யும் போது பல விடிவுகளை தமிழ் மக்களுக்கு பெற்றுத்தரும் என்பது தான் உண்மை. கடந்த உள்ளுராட்ச்சி சபை தேர்தலில் போரதீவு பற்று பிரதேச சபையில் த.ம.வி.பு கட்ச்சியில் நிறுத்தப்பட்டு அதி கூடிய வாக்காக 12000தை பெற்றேன். பிரதேச சபையின் தவிசாளராக சிறிது காலம் பணியாற்றினேன். அத்தோடு அகில இலங்கை உள்ளுராட்சி தவிசாளர்  சம்மேளன உப தலைவராக நான் கடமையாற்றியமையால் இதனூடாக உள்ளுராட்சி சட்டதிட்டத்திற்கு அமைவாக நான் லண்டன் சென்றேன். இரண்டரை மாத காலத்தின் பின்பு நாடு திரும்பினேன். எனினும் சட்டத்திற்கு முரணாக எனது பதவி பறிக்கப்பட்டது. இன்நிலையில் பதவியும் வேண்டாம் கட்சியும் வேண்டாம் என்று தூக்கி எறிந்தேன். நான் சென்ற பாதை தப்பானது என தெரிந்தும் பயணம் செய்தேன். ஆனால் இன்று புது யுகம் நோக்கி தமிழ் மக்களின் விடிவுக்காக, தமிழ் மக்களின் கொள்கைக்காக, தமிழ் மக்களின் உரிமை போராட்டத்திற்காக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் கிழக்கு மாகாண சபை வேட்பாளராக போட்டி இடுகிறேன். நான் தற்போது தெரிவு செய்த பாதை சரியானது. தெரிவு செய்த பாதை கரடு முறடானது. தெரிவு செய்த பாதை நீளமானது. எனினும் எங்கள் உரிமைகளை வென்றெடுக்க,இலட்சியத்தை நிலை நாட்ட எனக்கு வாக்களியுங்கள். என்னை வெற்றி பெற செய்யுங்கள். எனது உரிமைக்குரல் என்றும் ஓங்கி ஒலிக்கும்”.