த.ம.வி.பு கட்சியின் உபசெயலாளர் இராஜினாமா
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப செயலாளரும் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான எஸ்.செல்வேந்திரன் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்.
கட்சி அங்கத்துவத்திலிருந்தும் தான் விலகியுள்ளதாக தெரிவித்த அவர், தனது இராஜினாமா கடிதத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கையளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.