தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாய் தந்தையை இழந்த வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக சேவகம் நிறுவனம் பாடசாலை உபகரணங்களை உதவியாக வழங்கிவருகின்றது. இதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் மட்.செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தாய் தந்தையை இழந்த சுமார் 75 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் உதவியாக வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன், இப்பாடசாலையில் எதிர்வரும் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்குடன் இம் மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள்களை பிரதியெடுப்பதற்கான முழுப்பொறுப்பையும் சேவகம் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.