சனல் 4 காணொளி இன்று வெளியாகிறது
இலங்கையின் கொலைக்களம் – தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள் என்ற செனல் 4 தொலைக்காட்சியின் காணொளி இன்று வெளியாகவுள்ளது. பிரித்தானிய நேரப்படி இன்றிரவு 10.55 அளவில் இக் காணொளி ஒளிபரப்பாகவுள்ளதாக செனல் 4 தெரிவித்துள்ளது. இக் காணொளியில், புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வர், பாலசந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. குறிப்பாக இக் காணொளியில் இறுதி யுத்தத்தின் செய்மதி படங்கள் பலவற்றை காட்சிப்படுத்துவதாக செனல்4 கூறியுள்ளது. இறுதி யுத்தம் இடம்பெற்ற இறுதி 3 மாதங்களுள் பல பொதுமக்கள் கொல்லப்பட்டமை, மோதல் தவிர்ப்பு பகுதிகளில் எறிகணை வீச்சுக்கள் நடத்தியமை, ஐ.நாவின் உணவு நிவாரண நிலையம் தாக்கப்பட்டமை உள்ளிட்ட விபரங்களும் இதில் உள்ளடங்குதாக செனல்4 கூறியுள்ளது.