ஒலிம்பிக் இன்று கோலாகல தொடக்கம்
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. பிரபல இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் தொடக்க விழா நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன.
தொடக்க விழா நடைபெறும் அரங்கில் பிரதான ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.இங்கிலந்து நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொடக்க விழாவின்போது நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.