இயக்கச்சியில் புத்தர்சிலை திறந்துவைப்பு
இயக்கச்சியில் படையினரால் அமைக்கப்பட்ட புதிய புத்தர் சிலையொன்று கடந்த வியாழக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. படையினரின் முதலாவது இயந்திர காலாட்படைப் பிரிவனரால் இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1992ல் இயக்கச்சிப் பகுதியை படையினர் கைப்பற்றும்வரை அங்கு எந்த பௌத்த வழிபாட்டுச் சின்னமும் அமைந்திருக்கவில்லை. மேற்படி சிலை திறப்புவிழாவில் படை அதிகாரிகளும், பௌத்த பிக்குகளும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.