அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுதினம்
| இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 27ம் ஆண்டு நினைவுதினம் நாளை (02.09.2012) அனுஷ்டிக்கப்படவுள்ளது. 27வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது. |